29 ஆயுஷ் டாக்டர் பணியிடம் மார்ச் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
29 ஆயுஷ் டாக்டர் பணியிடம் மார்ச் 4க்குள் விண்ணப்பிக்கலாம்
UPDATED : பிப் 14, 2025 12:00 AM
ADDED : பிப் 14, 2025 12:34 PM

சென்னை:
ஆயுஷ் மருத்துவமனைகளில், பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள, 29 உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வழியே நிரப்பப்பட உள்ளன.
தமிழகத்தில் ஆயுஷ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மட்டுமின்றி, அலோபதி மருத்துவமனைகளிலும் ஆயுஷ் பிரிவு செயல்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு பிறகு, ஆயுஷ் மருத்துவ முறைகளில் சிகிச்சை பெறுவோர் அதிகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆயுஷ் மருத்துவத்தில் காலியாக உள்ள 29 பணியிடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையமான, எம்.ஆர்.பி., வழியாக நிரப்பப்பட உள்ளன. அதாவது, 26 சித்தா டாக்டர்கள்; இரண்டு ஆயுர்வேத டாக்டர்கள்; ஒரு யுனானி டாக்டர் பணியிடங்கள், தற்காலிக பணி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
நேரடி சேர்க்கை வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்படுவதால், விருப்பம் உள்ளவர்கள், மார்ச் 4ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணியில் சேரும் டாக்டர்களுக்கு குறைந்தபட்சமாக, 56,100 முதல் 1 லட்சத்து 77,500 ரூபாய் வரை மாத சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.