UPDATED : ஏப் 15, 2025 12:00 AM
ADDED : ஏப் 15, 2025 11:11 AM
சேலம்:
என்.எம்.எம்.எஸ்., எனும், மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும் பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தேர்வு நடக்கிறது. இதில், தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு, 9 முதல் பிளஸ் 2 வரை, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை
நடப்பு கல்வியாண்டு தேர்வு, பிப்., 22ல் நடந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. 6,695 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் அதிகபட்சமாக, திருநெல்வேலி மாவட்டத்தில், 508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அடுத்து சேலம் மாவட்டத்தில், 479 பேர் தேர்ச்சி பெற்று, 2ம் இடம் பிடித்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், நேற்று வாழ்த்து தெரிவித்தார்.