UPDATED : ஜூன் 29, 2023 12:00 AM
ADDED : ஜூன் 29, 2023 04:32 AM
அ நிறம் | அளவு
சென்னை ஸ்டான்லி, தர்மபுரி, திருச்சி ஆகிய அரசு மருத்துவக் கல்லுாரிகள், உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றாததால், இந்தாண்டுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. உடனடியாக குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு ஆணையத்திற்கு அரசு தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்டான்லி, தர்மபுரி ஆகிய மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஐந்தாண்டுகளுக்கு அங்கீகாரம் அளித்து, ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டு அனுமதி பெற்றிருந்த கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லுாரிக்கும், ஐந்தாண்டுகளுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.திருச்சி மருத்துவக் கல்லுாரிக்கான அங்கீகாரம் தொடர்பான அறிவிப்பு இதுவரை வரவில்லை.
