3 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை: எல் அண்ட் டி முடிவு
3 ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு வேலை: எல் அண்ட் டி முடிவு
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சர்வதேச நிதி நெருக்கடியால் பல நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்துவரும் நிலையில் எல் அண்ட் டி நிறுவனம் இந்த அளவுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காக மூன்று கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.எம். நாயக் தெரிவித்துள்ளார். சென்னையிலும் கோவையிலும் புதிய ஆலைகளைத் தொடங்க எல் அண்ட் டி திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையே, யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி 5 ஆயிரம் பேரை வேலைக்குத் தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் எம்.வி. நாயர் தெரிவித்துள்ளார். 539 புதிய கிளைகளைத் தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. புதிய கிளைகளுக்காக ஊழியர்களைத் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்றார் அவர்.
திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள தனலட்சுமி வங்கியில் 1400 பேர் பணிபுரிகின்றனர். ஊழியர் பற்றாக்குறை நிலவும் இந்த வங்கியில் புதிதாக 400 பேர் வேலைக்குத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
