தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் படித்த 305 பேர் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி

அரசு பள்ளிகளில் படித்த 305 பேர் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி

அரசு பள்ளிகளில் படித்த 305 பேர் ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி


UPDATED : பிப் 23, 2026 03:26 PM

ADDED : பிப் 23, 2026 03:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 23, 2026 03:26 PM ADDED : பிப் 23, 2026 03:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டிகர்:
“ஐ.ஐ.டி., மற்றும் எம்.ஐ.டி., ஆகிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வில், பஞ்சாப் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த, 305 மாணவ - மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்,” என, பஞ்சாப் மாநில கல்வித் துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ் கூறினார்.

பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெய்ன்ஸ், நிருபர்களிடம் கூறியதாவது:

ஐ.ஐ.டி., மற்றும் எம்.ஐ.டி., ஆகிய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான, ஜே.இ.இ., முதன்மை நுழைவுத் தேர்வில் பஞ்சாப் மாநில அரசுப் பள்ளிகளின் 305 மாணவ, மாணவியர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி அடைந்துள்ளனர். இதுவே, கடந்த ஆண்டு, 187 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். இந்த ஆண்டு 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதன்மை நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ள, 305 பேருக்கும், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வுக்கு தயார்படுத்துவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தும். மூன்று வார சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

மாணவ, மாணவியரின் இந்த சாதனை பஞ்சாப் மாநில பள்ளிக் கல்வித் துறைக்கு மிகுந்த பெருமை சேர்க்கும் தருணம். அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களுக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரே ஒரு வருடத்தில் இவ்வளவு குறிப்பிடத்தக்க மைல் கல்லை அடைவது நம் பஞ்சாப் 'சீக்கிய கிரந்தி' முயற்சியின் மாற்றும் சக்திக்கு ஒரு சான்று. பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும்.

அமிர்தசரஸில் மொபைல் போன் பழுந்து நீக்கும் கடை நடத்துபவரின் மகள் பவிஷ்யா, 98.182 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். அவரது தாய் வீட்டிலேயே தையல் தொழில் செய்கிறார். கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், பவிஷ்யா மனம் தளராமல் படித்து சாதனை படைத்துள்ளார்.

அதே போல, பதிண்டாவை சேர்ந்த தில்குஷ் ஜா, 95.091 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். அவரது தந்தை கூலித் தொழிலாளி. மிகுந்த வறுமையில் வாடும் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

சங்ரூர் நகரில் வசிக்கும் பிரியங்கா சர்மா, நீட் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், ஜே.இ.இ., முதன்மைத் தேர்வில் 96.44 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். நாட்டில் வேறு எந்த மாநில அரசுப் பள்ளிகளிலும் இந்த அளவுக்கு சாதனை படைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us