பி.ஐ.எஸ்., அறிவித்த 345 காலிப்பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
பி.ஐ.எஸ்., அறிவித்த 345 காலிப்பணியிடங்கள்: பட்டதாரிகளுக்கு சூப்பர் சான்ஸ்!
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:23 PM
புதுடில்லி:
இந்திய தர நிர்ணய அமைப்பு ( பி.ஐ.எஸ்., ) குரூப் ஏ, பி மற்றும் சி பதவிகளுக்கான 345 காலி பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30ம் தேதி.
பி. ஐ. எஸ்., என்பது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்களில் தரத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிறுவனத்தில் இருக்கும் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
குரூப் ஏ
* உதவி இயக்குனர் (நிர்வாகம் மற்றும் நிதி)- 01
* உதவி இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர்)- 01
* உதவி இயக்குனர் (இந்தி)- 01
குரூப் பி
* உதவியாளர்- 28
* உதவி பிரிவு அலுவலர்- 43
* தொழில்நுட்ப உதவியாளர்- 27
குரூப்- சி
* மூத்த டெக்னீஷியன்- 18
* தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரீசியன்/வயர்மேன்)- 01
* மூத்த செயலக உதவியாளர்-128
* இளநிலை செயலக உதவியாளர்-78
கல்வித் தகுதி என்ன?
* உதவி இயக்குனர் (நிர்வாகம் மற்றும் நிதி) பணியிடங்களுக்கு எம்.பி.ஏ., அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மூன்றாண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.
* உதவி இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர்) பணியிடங்களுக்கு
MBA மார்க்கெட்டிங் அல்லது மாஸ் கம்யூனிகேஷன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.
* உதவி இயக்குனர் (இந்தி பணியிடங்களுக்கு பட்டப்படிப்பில் ஹிந்தி, ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு, 65 சதவீதம் மதிப்பெண்களுடன் அறிவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* மூத்த டெக்னீஷியன், தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரீசியன்/வயர்மேன்) பணியிடங்களுக்கு பத்தாம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
* ஸ்டெனோகிராபர், மூத்த செயலக உதவியாளர், இளநிலை செயலக உதவியாளர் பணியிடங்களுக்கு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
* உதவி இயக்குனர் (நிர்வாகம் மற்றும் நிதி), உதவி இயக்குநர் (சந்தைப்படுத்தல் மற்றும் நுகர்வோர்), உதவி இயக்குனர் (இந்தி) பணியிடங்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும் .
* உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு, 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* மூத்த டெக்னீஷியன், தொழில்நுட்ப வல்லுநர் (எலக்ட்ரீசியன்/வயர்மேன்) பணியிடங்களுக்கு 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வரும் செப்டம்பர் 9ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
செப்டம்பர் 30.