மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியரை உரித்து ஊர்வலப்படுத்திய பெற்றோர்
மாணவியரிடம் அத்துமீறிய ஆசிரியரை உரித்து ஊர்வலப்படுத்திய பெற்றோர்
UPDATED : ஆக 31, 2024 12:00 AM
ADDED : ஆக 31, 2024 03:24 PM
பால்கர்:
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ளது விரார் நகரம். இங்கு மோரியா, 40, என்பவர் டியூஷன் மையம் நடத்தி வருகிறார். இதில், 10ம் வகுப்பு வரை ஏராளமான மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கு படித்து வரும் 13 வயது சிறுமி திடீரென டியூஷனுக்கு செல்ல மறுத்துள்ளார். இது தொடர்பாக பெற்றோர் விசாரித்தபோது, ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் டியூஷன் மையத்துக்கு சென்று அங்கிருந்த ஆசிரியர் மோரியாவை வெளியே இழுத்து வந்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
மேலும், அவரது சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி, தெருவில் இழுத்து சென்று போலீசில் ஒப்படைத்தனர்.
அப்போது டியூஷன் படிக்கும் மற்ற சிறுமியரிடமும் ஆசிரியர் தவறாக நடந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.