ஏப்ரல் சம்பளம் பெறுவதில் 3500 ஆசிரியர்களுக்கு சிக்கல்
ஏப்ரல் சம்பளம் பெறுவதில் 3500 ஆசிரியர்களுக்கு சிக்கல்
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:16 AM

சென்னை:
பணி நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால் தமிழகத்தில் 3500 ஆசிரியர்கள் ஏப்ரல் மாதம் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 8000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், கே.ஹெச்., தலைப்பில், 3500 ஆசிரியர்கள் சம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு பணி ஆணை, அவ்வப்போது நீட்டிக்கப்படுகிறது. அதன்படி மார்ச்சுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு ஆணை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஏப்ரல் சம்பளம் பெறுவதற்கான ரசீது அனுப்பப்படவில்லை.
அகவிலைப்படி நிலுவையும், மற்ற அரசு ஆசிரியர்கள் பெற்ற நிலையில் இவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால் நீட்டிப்பு ஆணையை, உடனே வெளியிட்டு, அகவிலைப்படி நிலுவை, சம்பளம் வழங்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.