தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியீடு
UPDATED : ஏப் 26, 2024 12:00 AM
ADDED : ஏப் 26, 2024 10:17 AM

தமிழக அளவில் அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்திய தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வு முடிவுகள் வெளியானது.
ஆண்டுதோறும் பிப்., ஆகஸ்ட்டில் இளநிலை, முதுநிலைக் கான தமிழ், ஆங்கிலம் தட்டச்சர், (டைப்ரைட்டிங்) சுருக்கெழுத்தர் (சார்ட் ஹேண்ட்) சி.ஓ.ஏ., (கணினி) தேர்வுகள் நடைபெறும். டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழக அளவில் இத்தேர்வுகள் கடந்த பிப்., நடந்தது. இதற்கான முடிவுகள் வெளியானது. இதில் தட்டச்சு இளநிலை ஆங்கிலத்தில் 69.71 சதவீதமும், தமிழில் 75.41 சதவீதமும், தட்டச்சு முதுநிலை ஆங்கிலம் 62.04 சதவீதமும், தமிழில் 66.76 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சுருக்கெழுத்து ஆங்கிலம் இளநிலை தேர்வில் 26.07 சதவீதமும், தமிழ் இளநிலை தேர்வில் 49.52 சதவீதமும், சுருக்கெழுத்து முதுநிலை ஆங்கிலம் 15.41 சதவீதமும், தமிழில் 51.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆண்டு தோறும் சுருக்கெழுத்து தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்து வருகிறது.
அரசு அங்கீகாரம் பெற்ற சுருக்கெழுத்து பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர் மூலம் படித்து எழுதாமல் தனித் தேர்வர்களாக எழுதுவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டது.