தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோடைகால பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 372 பேர் பங்கேற்பு

கோடைகால பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 372 பேர் பங்கேற்பு

கோடைகால பயிற்சி முகாம் கிருஷ்ணகிரியில் 372 பேர் பங்கேற்பு


UPDATED : மே 03, 2024 12:00 AM

ADDED : மே 03, 2024 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 03, 2024 12:00 AM ADDED : மே 03, 2024 12:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:
மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்து வரும், கோடை கால பயிற்சி முகாமில், 372 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் கடந்த, 29ல் துவங்கியது. முகாம் காலை, 6:30 முதல், 8:30 மணி வரையும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரையும் நடக்கிறது. இதில், தடகளம், ஹேண்ட் பால், ஜூடோ, குத்துச் சண்டை, தேக்வாண்டோ, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல், ஓசூர் மற்றும் ஊத்தங்கரை மினி விளையாட்டு அரங்கிலும் கோடை கால பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இதில், 242 ஆண்கள், 130 பெண்கள் என மொத்தம், 372 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

முகாமில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை, 200 ரூபாய் செலுத்தி, மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பெயர்களை பதிவு செய்ய, 74017 03487 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us