அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க விழுப்புரத்தில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு
அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க விழுப்புரத்தில் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு
UPDATED : மே 03, 2024 12:00 AM
ADDED : மே 03, 2024 12:22 PM

விழுப்புரம் :
தமிழக அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிக்க, விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான தேர்வு போட்டிகள் நடக்கிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கு, மாணவ, மாணவிகளுக்கான, விழுப்புரம் மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள், வரும் மே 10, மே 11 ஆகிய நாள்களில், மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், விழுப்புரம் ,கடலுார், அரியலுார் பல்வேறு மாவட்டங்களில் உள்ளது.
மாணவிகளுக்கான விடுதிகள் தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, நேரு உள் விளையாட்டரங்கம் - சென்னை, நாகர்கோவில், நாமக்கல், உதகமண்டலம், பெரம்பலுார், புதுக்கோட்டை, - நாமக்கல், திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில், மாணவர்களுக்கு தடகளம், கூடைப்பந்து,குத்துச்சண்டை, கிரிக்கெட், வாள்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜீடோ, கபடி, மல்லர்கம்பம், ஸ்குவாஷ், நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுத்தூக்குதல், மல்யுத்தம், மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, வாள்ச்சண்டை, கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி, ஜீடோ, கபடி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதுாக்குதல் ஆகிய விளையாட்டுகள் இருக்கின்றன.
இந்த விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கு 6,7,8,9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான தேர்வுகள் 10.5.2024 காலை 7.00 மணிக்கு ஆண்களுக்கும், 11.5.2024 தேதி காலை 7.00 மணிக்கு பெண்களுக்கும், விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், விடுதியில் சேர்க்கைக்காக, ஆன்லைன் விண்ணப்ப படிவத்தினை 26.4.2024 முதல் www.sdat.tn.gov.in இணைய தள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்வதற்கான கடைசிநாள் 8.5.2024 மாலை 5.00 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். மேலும் தகவல்களுக்கு 9514000777 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தேர்வு போட்டிகள் தொடர்பான விபரங்களை, மாவட்ட விளையாட்டு அலுவலக முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசியிலோ 7401703485, 8754744060, 6381799370 தொடர்பு கொண்டு விவரம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.