தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'தினமலர் - பட்டம்' - வி.ஐ.டி., சென்னை இணைந்து நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி: 302 பள்ளிகளில் இருந்து 1,283 பேர் பங்கேற்பு

'தினமலர் - பட்டம்' - வி.ஐ.டி., சென்னை இணைந்து நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி: 302 பள்ளிகளில் இருந்து 1,283 பேர் பங்கேற்பு

'தினமலர் - பட்டம்' - வி.ஐ.டி., சென்னை இணைந்து நடத்திய பிரமாண்ட செஸ் போட்டி: 302 பள்ளிகளில் இருந்து 1,283 பேர் பங்கேற்பு


UPDATED : அக் 10, 2026 10:06 AM

ADDED : அக் 10, 2026 10:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 10:06 AM ADDED : அக் 10, 2026 10:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழும், வி.ஐ.டி., பல்கலையும் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கான செஸ் போட்டியை, சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள பல்கலை அரங்கில் நேற்று மிக பிரமாண்டமாக நடத்தின. இதில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 401 மாணவியர், 882 மாணவர்கள் என, 1,283 பேர் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் கல்வித் திறன் மட்டுமின்றி, அவர்களின் தனித் திறன்களையும் வளர்த்தெடுக்கும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் வெளியாகி வருகிறது.

அதன்படி, செஸ் விளையாட்டில் ஆர்வம், திறமை உள்ள மாணவ, மாணவியரின் திறன்களை ஊக்குவித்து, மேலும் வளர்க்கும் வகையில், 2024ம் ஆண்டு முதன்முறையாக, பள்ளி மாணவர்களுக்கு இடையில், மாநில அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டு, பெரும் வரவேற்பு பெற்றது.

அதை தொடர்ந்து, கடந்த ஆண்டும் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஒரு நாள் செஸ் போட்டியில், 21 பள்ளிகளைச் சேர்ந்த 965 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக நேற்று நடந்த போட்டியில், 882 மாணவர்கள், 401 மாணவியர் என, மொத்தம் 1,283 பேர் பங்கேற்றனர்.

இதில், 302 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 9 வயது பிரிவில் 184 மாணவர்கள், 106 மாணவியர்; 11 வயது பிரிவில் 227 மாணவர்கள், 101 மாணவியர்; 13 வயது பிரிவில் 246 மாணவர்கள், 107 மாணவியர்; 15 வயது பிரிவில் 144 மாணவர்கள், 84 மாணவியர்; 17 வயது பிரிவில் 78 மாணவர்கள், 37 மாணவியர் என, மொத்தம் 1,283 பேர் பங்கேற்றனர்.

இரு பாலர் பிரிவிலும் தலா 20 நிமிடங்கள் என, ஏழு சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பெண்கள் பிரிவில் 15 வயது மற்றும் 17 வயது பிரிவில் மட்டும் ஆறு சுற்றுகளாக போட்டிகள் நடந்தன.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங்கனையருக்கு மொத்தம், 1 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் கோப்பைகளும் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு பிரிவிலும் நான்காம் இடம் முதல், 13வது இடம் பிடித்த வீரர், வீராங்கனையருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

சிறந்த போட்டியாளர்களை களமிறக்கிய பள்ளிகளுக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

சர்வதேச போட்டிகளில் நடுவராக பங்கேற்று வரும் ரவிகுமார், இப்போட்டியின் தலைமை நடுவராக பணியாற்றினார்; அவரின் தலைமையில், 46 நடுவர்கள் பணியாற்றினர்.

போட்டியின் ஒவ்வொரு சுற்று முடிவுகளையும் உடனுக்குடன் கணினியில் உள்ளீடு செய்து, வீரர்கள் பெற்றுள்ள புள்ளிவிபரங்களை முகப்பு பலகையிலும், செயலி வாயிலாகவும் வெளியிட்டு, சர்வதேச போட்டிக்கு இணையாக இந்த போட்டியை சிறப்புற நடத்தினர்.

காலை 9:30 மணி முதல் சுற்று போட்டிகள் துவங்கின. 'தினமலர்' நாளிதழ் இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி, வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் மற்றும் செஸ் போட்டியில் பங்கேற்ற ஒரு மாணவர், ஒரு மாணவி ஆகியோர் குத்து விளக்கேற்றி போட்டிகளை துவக்கி வைத்தனர்.

விழாவில், 'தினமலர்' இணை ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:


'தினமலர்' நாளிதழ் மற்றும் வி.ஐ.டி., பல்கலை இணைந்து, பல்வேறு சமூக நலன் சார்ந்த முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. அவற்றில் மிக முக்கிய நிகழ்வாக, 'பட்டம் செஸ்' போட்டி கருதப்படுகிறது.

செஸ் போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே சாம்பியன்கள் தான். இப்போட்டியில் மாணவர்கள் பங்கேற்பது, 'தினமலர்' நாளிதழுக்கு கிடைத்த கவுரவம். இப்போட்டியில் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி, இந்த நாளை ஒரு நல்ல நினைவாக அனைவரும் தங்களோடு எடுத்து செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

வி.ஐ.டி., பல்கலை துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசியதாவது:


'செஸ்' போட்டியில் வெற்றி, தோல்வி முக்கியமல்ல. செஸ் போட்டியில் சிந்தித்து செயல்படும் திறன் அவசியம். இந்த போட்டியில் ஒவ்வொரு நகர்வும் வாழ்க்கைக்கான பாடம் தான். தமிழகத்தில் பல செஸ் ஜாம்பவான்கள் உள்ளனர்.

உலக அளவில் அதிக 'கிராண்ட் மாஸ்டர்'களை உருவாக்கும் மாநிலங்களில், தமிழகம் முன்னிலையில் உள்ளது. எனவே, நீங்களும் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ், பிரக்ஞானந்தா போல் கிராண்ட் மாஸ்டர்களாக வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us