தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/'காபி வித் கலெக்டர்' நிகழ்வில் நாளிதழ் படிக்க அறிவுரை!

'காபி வித் கலெக்டர்' நிகழ்வில் நாளிதழ் படிக்க அறிவுரை!

'காபி வித் கலெக்டர்' நிகழ்வில் நாளிதழ் படிக்க அறிவுரை!


UPDATED : ஜன 11, 2026 02:10 PM

ADDED : ஜன 11, 2026 02:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2026 02:10 PM ADDED : ஜன 11, 2026 02:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: 'வெற்றி பள்ளிகள்' வாராந்திர பயிற்சியில் ஈடுபடும் அரசு பள்ளி மாணவ மாணவியுடன், 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்து மாணவியர்கள் கலந்துரையாடி அவர்களது கோரிக்கை தேவைகளை கேட்டறிந்து பேசியதாவது:
மாணவ மாணவியர் கல்வி அறிவுடன் சமூகம், பொது அறிவையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு பாடப்புத்தகங்களை கடந்து, உலக அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, சமூக உணர்வை ஏற்படுத்தும் நாளிதழ்களை படிக்க வேண்டும். உயர் கல்வி படிக்க ஏராளமான பாடப்பிரிவுகள் உள்ளன. விரும்பிய பாடத்தை தேர்வு செய்து படிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரி படிப்புடன் போட்டி தேர்வுகளுக்கும் தயாராகும் வகையில் பயிற்சி பெற வேண்டும். அதிகமாக புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்வில் சி.இ.ஓ., மான்விழி உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us