UPDATED : ஜூலை 26, 2026 07:01 PM
ADDED : ஜூலை 26, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்:
'நீட்' போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியருக்கான பாராட்டு விழா, நாளை (27ம் தேதி) நடக்கிறது.
இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து, 'நீட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா, நாளை பள்ளி வளாகத்தில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி வரவேற்கிறார்.
மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர். வெற்றி அறக்கட்டளை தலைவர் சிவராம் தலைமையிலான குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
