sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஏப்ரல் 12, 2026 ,பங்குனி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

'ஆர்க்கிடெக்ட்' ஆக எழுதுங்கள் 'நாட்டா'

/

'ஆர்க்கிடெக்ட்' ஆக எழுதுங்கள் 'நாட்டா'

'ஆர்க்கிடெக்ட்' ஆக எழுதுங்கள் 'நாட்டா'

'ஆர்க்கிடெக்ட்' ஆக எழுதுங்கள் 'நாட்டா'


UPDATED : மார் 31, 2026 10:55 PM

ADDED : மார் 31, 2026 10:58 PM

Google News

UPDATED : மார் 31, 2026 10:55 PM ADDED : மார் 31, 2026 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு 'ஆர்க்கிடெக்ட்' ஆக எதிர்காலத்தில் பிரகாசிக்க விரும்பும் மாணவ, மாணவியர் எழுத வேண்டிய திறனறித் தேர்வு 'நாட்டா' எனும் 'நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்க்கிடெக்சர்'. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' இத்தேர்வை நடத்துகிறது.

படிப்பு:
பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,) - 5 ஆண்டுகள்

கல்வி நிறுவனங்கள்:

அனைத்து வகையான பல்கலைக்கழகங்கள், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி.,), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,), தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், அரசு கல்லூரிகள், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகள் என கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சரால் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் எந்த ஒரு கல்வி நிறுனத்திலும் ஆர்க்கிடெக்சர் படிப்பில் சேர்க்கை பெற 'நாட்டா' எழுத வேண்டியது அவசியம்.

தகுதிகள்:

இயற்பியல், கணிதம் ஆகியவற்றுடன் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாடத்தை 12ம் வகுப்பில் படித்திருக்க வேண்டும் அல்லது 10ம் வகுப்பிற்கு பிறகு கணித பாடத்துடன் டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும். இவற்றில் எதுவாயினும், குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
https://stureg.nata-app.org/auth/login எனும் இணையதளம் வயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், புதுச்சேரி, ஹைதராபாத், பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தேர்வு நடைபெறும் நாட்கள்:
முதல்கட்டமாக, ஏப்ரல் 4 முதல் ஜூன் 13ம் தேதி வரை பல்வேறு நாட்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

விபரங்களுக்கு:
www.nata.in






      Dinamalar
      Follow us