sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்விப் பணியில் மகத்துவம் காட்டும் 'தினமலர்!' : அண்ணாமலை

/

கல்விப் பணியில் மகத்துவம் காட்டும் 'தினமலர்!' : அண்ணாமலை

கல்விப் பணியில் மகத்துவம் காட்டும் 'தினமலர்!' : அண்ணாமலை

கல்விப் பணியில் மகத்துவம் காட்டும் 'தினமலர்!' : அண்ணாமலை


UPDATED : செப் 08, 2025 12:00 AM

ADDED : செப் 08, 2025 08:32 AM

Google News

UPDATED : செப் 08, 2025 12:00 AM ADDED : செப் 08, 2025 08:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'தினமலர்' நாளிதழ், தன் 75வது ஆண்டில் பவள விழாவிற்குள் அடியெடுத்து வைக்கிறது என்ற செய்தியறிந்து, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தின் தென்கோடியில் துவங்கப்பட்டு, இன்று தமிழகம் முழுதும் முன்னணி நாளிதழ்களில் ஒன்றாக, 'தினமலர்' உயர்ந்திருப்பது, அதன் நிறுவனர், அமரர் டி.வி.ராமசுப்பையரின் தொலைநோக்கு சிந்தனைக்கும், கடின உழைப்பிற்கும் கிடைத்துள்ள வெகுமதி!

கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க முக்கிய பங்காற்றிய பெருமைக்குரியது. 'தினமலர்' நாளிதழ் செய்திகளை மட்டும் தரும்நாளிதழாக இல்லாமல், ஜனநாயகத்தின் முக்ககிய துாணாக அரசுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டுக் கொண்டிருப்பது 'தினமலர்' நாளிதழின் தனிச்சிறப்பு.

கடந்த 70 ஆண்டுகளாக, மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வுகள் கிடைக்கும் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் தான், இத்தனை ஆண்டுகளாக பெரும் வரவேற்பைப் பெறும் நாளிதழ்களில் ஒன்றாக, 'தினமலர்' விளங்கி வருகிறது.

ஆண்டுதோறும் தமிழகத்தின் பல நகரங்களில், 'தினமலர்' நடத்தி வரும், 'நீங்களும் ஆகலாம் ஐ.ஏ.எஸ்.,' நிகழ்ச்சி, அதன் கல்விப்பணியின் உச்சம். மாணவர்களுக்கு கடினமானகடினமான ஐ.ஏ.எஸ்., தேர்வுகளை எதிர்கொள்ள நம்பிக்கையையும், மனவலிமையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. சென்னையிலும், மதுரையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று, மாணவர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை தமிழகம் முழுதும் கொண்டு செல்லும் நோக்கோடு றநாக்றகாடு, பா.ஜ., மாநில தவலவராக தமிழகம் முழுதும் நாங்கள் மேற்கொண்டை, 'என் மண்; என் மக்கள்' நடைபயணத்தை தமிழகம் முழுதும் கொண்டு சென்றதில், 'தினமலர்' நாளிதழுக்கு முக்கிய பங்குண்டு.

இந்த பயணத்தின் போது ஒவ்வொரு நாளும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் உரையாடிய அனுபவங்கவள, 'தினமலர்' நாளிதழில் தினமும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தது மிக மிக நன்றிக்குரியது. அந்த கட்டுரைகளை தொகுத்து 'உங்களின் ஒருவன்' என்ற பெயரில் நுாலாக, 'தினமலர்' குழுமம் சார்ந்த தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் வெளியிட்டபோது, 'தினமலர்' நாளிதழின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது பெரும் மகிழ்ச்சி. எங்கள் நடைபயணத்திற்கு பெருமை சேர்த்தது தினமலர் நாளிதழ் தான்.

கடந்த 74 ஆண்டுகளாக தமிழக மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும், 'தினமலர்' நாளிதழ், இன்னும் பல நுாறாண்டுகள் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்று, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் கடின உழைப்பாலும், சமூத்தின் மீது கொண்ட அக்கறையாலும் சிறப்பாக செயல்பட்டு முன்னணி ஊடகங்களில் ஒன்றாக தினமலர் நாளிதழை உயர்த்தியிருக்கும் நிர்வாகம், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.






      Dinamalar
      Follow us