UPDATED : அக் 17, 2025 08:14 AM
ADDED : அக் 17, 2025 08:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், 'நான் உயிர் காவலன்' சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி நிகழ்ச்சி நடந்தது.
சாலைப்பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துதல், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சாலைப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடந்த இந்நிகழ்வில், கலெக்டர் பவன்குமார் தலைமையில் பேராசிரியர்கள், மாணவர்கள் சாலைப்பாதுகாப்பு உறுதி மொழி ஏற்றனர்.
கோவை மாவட்டத்தில் 10 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்க வைக்கும் இலக்கில், இதுவரை 6 லட்சம் பேர் உறுதிமொழி ஏற்றுள்ளனர் என, கலெக்டர் தெரிவித்தார்.
பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், டீன் ரவிராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.