'ரோடு சைக்கிளிங்' பந்தயம் மாணவ - மாணவியர் உற்சாகம்
'ரோடு சைக்கிளிங்' பந்தயம் மாணவ - மாணவியர் உற்சாகம்
UPDATED : அக் 29, 2025 08:32 AM
ADDED : அக் 29, 2025 08:34 AM
சென்னை:
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடந்த மாவட்ட அளவிலான 'ரோடு சைக்கிளிங்' பந்தயத்தில், 60க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர்.
பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், பாரதியார் தினம் மற்றும் சுதந்திர தின விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, வருவாய் மாவட்ட அளவிலான 'ரோடு சைக்கிளிங்' எனும் சாலை மிதிவண்டி போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், நேற்று முன்தினம் பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது.
இதில், 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், மாணவருக்கான 14 வயது பிரிவில், சேதுபாஸ்கரா பள்ளியின் பவித்ரன் முதலிடத்தை பிடித்தார்.
அதேபோல், 17 வயது பிரிவில், வியாசர்பாடி, தேராபந்த் ஜெயின் வித்யாலயாவின் தருண், 19 வய து பிரிவில் சேது பாஸ்கரா பள்ளியின் கிஷோர் ஆகியோர் முதலிடங் களை கைப்பற்றினர்.
மாணவியருக்கான 14 வயது பிரிவில், உர்சுலாஸ் பள்ளியின் அனாமிகா ரவி, 17 வயது பிரிவில், உர்சுலாஸ் பள்ளியின் தியாஸ்ரீ, 19 வயது பிரிவில், சேதுபாஸ்கரா பள்ளியின் தாக் ஷாயினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

