sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

'கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்க நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவீர்'

/

'கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்க நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவீர்'

'கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்க நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவீர்'

'கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் கிடைக்க நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுவீர்'


UPDATED : அக் 17, 2025 07:33 AM

ADDED : அக் 17, 2025 07:34 AM

Google News

UPDATED : அக் 17, 2025 07:33 AM ADDED : அக் 17, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
உத்தம் பவுண்டேசன் சார்பில். சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தை கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி, வரதராஜபுரம் சாய் விவாஹா மஹாலில் நேற்று நடந்தது. இதில், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம், 100 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:


குழந்தைகளுக்கு வழங்கப்படும் நிதியை உதவித்தொகை என்றில்லாமல், ஊக்கத்தொகை என்றுதான்கூற வேண்டும்.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பிறகு கல்வியிலும், மருத்துவத்திலும்தோற்றுள்ளோம். பணம் இருப்பவர்களுக்கு ஒரு வாழ்க்கை, இல்லாதவர்களுக்கு ஒரு வாழ்க்கை என்பதை கடந்த, 75 ஆண்டுகளையும் தாண்டி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நம் தலைமுறை முடியும்பொழுது கல்வியும், மருத்துவமும் அனைவருக்கும் சமமாக கிடைக்கவேண்டும்;அது உடனே நடக்காது. அதை நோக்கி அரசியல் நடவடிக்கைகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. மேற்கத்திய நாடுகள் போன்று இங்கு இவ்விரண்டிலும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

அதற்காக நாம் லஞ்சம், லாவண்யம் இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும். எனவே, நல்லவர்களை தேர்வு செய்து ஓட்டுப்போட வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

உத்தம் பவுண்டேசன் நிறுவனர் பாலாஜி உத்தமராமசாமி, கோவை ரமேஷ், சரணாலயம் நிறுவனர் வனிதா,பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us