UPDATED : செப் 24, 2024 12:00 AM
ADDED : செப் 24, 2024 12:59 PM

சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் மற்றும் அமைப்புகள் நீர் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், நீர் சார்ந்த பிரச்னைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. உரிய தீர்வு காணப்பட வேண்டுமென்றால், நீர் அரசியலாக்கப்பட வேண்டும் என்று இந்திய நீர் வாரத்தை முன்னிட்டு புதுடில்லியில் நடந்த சர்வதேச நீர் மாநாட்டில் சர்வதேச வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
''நம் நாட்டில் கடைபிடிக்கப்பட்ட பல்வேறு வகையான பழைய நீர் மேலாண்மை அம்சங்கள் இன்றைய காலத்திற்கும் பொருத்தமாக உள்ளன. ஆகவே, நமது பழைய நீர் மேலாண்மை முறைகளை, நவீன சூழலில் ஆராய்ச்சி செய்து நடைமுறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, கிணறுகள் மற்றும் குளங்கள் நம் சமூகத்தின் நீர் வங்கிகளாக இருந்து வருகின்றன. மக்கள் முதலில் தண்ணீரை சேமித்து வைத்தால் தான், அவர்களால் அவற்றை பயன்படுத்த முடியும். வருமானத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதை போல், தண்ணீரையும் சேமித்துவைக்க வேண்டும்'' என்று இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு குறிப்பிட்டார்.