UPDATED : டிச 24, 2025 07:50 AM
ADDED : டிச 24, 2025 07:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
தமிழகம் முழுதும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பைச் சேர்ந்த, பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்காக, 1,363 விடுதிகள் நடத்தப்படுகின்றன.
இவற்றில், 78,368 மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு, 'வெல்கம் கிட்' எனப்படும் வரவேற்பு பெட்டகம் வழங்கப்பட உள்ளது. இப்பெட்டகத்தில், மெத்தையுடன் கூடிய பாய், போர்வை, தட்டு, டம்ளர், பிளாஸ்டிக் பக்கெட், கப், சணல் பை போன்றவை இடம்பெறும்.
இவற்றை வழங்குவதற்கான நிறுவனத்தை தேர்வு செய்வதற்காக, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது.

