தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4 ஆண்டுகளில் 13 ஆயிரம் ஆசிரியர் நியமன வாய்ப்பு

4 ஆண்டுகளில் 13 ஆயிரம் ஆசிரியர் நியமன வாய்ப்பு

4 ஆண்டுகளில் 13 ஆயிரம் ஆசிரியர் நியமன வாய்ப்பு


UPDATED : டிச 19, 2009 12:00 AM

ADDED : டிச 19, 2009 01:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2009 12:00 AM ADDED : டிச 19, 2009 01:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு


 
இதற்கு அனுமதி கிடைத்தால், நான்கு ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தின் கீழ் மட்டும் 13 ஆயிரத்து 314 ஆசிரியர்கள் நியமனம் செய்ய வாய்ப்புள்ளது என மேல்நிலைக்கல்வி இணை இயக்குனர் கார்மேகம் சேலத்தில் தெரிவித்தார்.
 
அனைவருக்கும் நடுநிலைக்கல்வி திட்டத்தின் கீழ் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு அடிப்படை விவரம் திரட்டும் பணிமனை சேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர்(மேல்நிலைக்கல்வி) கார்மேகம் கூறியதாவது:


தமிழகத்தில் தொடக்கக்கல்வியை வலுப்படுத்தும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் கல்வித்தரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
 
இதன் அடுத்த கட்டமாக ஒன்பதாம் வகுப்பு மற்றும் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புகள் நடக்கும் இடைநிலைக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் நிதியுதியுடன் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் துவக்கப்பட்டுள்ளது. நடப்பு 2009-10 கல்வியாண்டில் இத்திட்டத்தில் தமிழகத்துக்கு 151 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பெண் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம் 44 மாணவியர் விடுதியும், 18 மாதிரி பள்ளிகளும் உருவாக்கப்பட உள்ளன. மாணவியர் விடுதிக்கு தலா 56.77 லட்சம் ரூபாய் வீதம் 24.98 கோடியும், மாதிரி பள்ளி தலா 3.77 கோடி மதிப்பில் மொத்தம் 67.86 கோடி ரூபாயும் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதல் பள்ளிகளுக்கு தேவையான ஆய்வகம், கட்டிடம், கழிப்பறை வசதி, கம்ப்யூட்டர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்கு முதல்கட்டமாக பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. அதுகுறித்த மாநில அளவிலான பணிமனை சேலத்தில் நடத்தப்படுகிறது.அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் 200 புதிய பள்ளிகள் துவக்கப்பட உள்ளது. இவற்றில் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஏழு ஆசிரியர்கள் வீதம் 1, 400 ஆசிரியர்கள் இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட உள்ளனர்.
 
இத்திட்டத்தில் நான்கு ஆண்டுகளுக்குள் தமிழகத்தில் மொத்தம் 1,902 புதிய பள்ளிகள் துவக்க திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால், நான்கு ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தின் கீழ் மட்டும் 13 ஆயிரத்து 314 ஆசிரியர்கள் நியமனம் செய்ய வாய்ப்புள்ளது. நடப்பாண்டில் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஐந்து நாள் கணினி வழிக்கல்வி குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
 
முதல் கட்ட பயிற்சி 65 மையங்களில் நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். சேலம் முதன்மைக்கல்வி அலுவலர் ராஜராஜன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து 120க்கும் மேற்பட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டு, தங்களது மாவட்ட பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பயற்சி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us