sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வாழ்வை தீர்மானிக்கும் 4 ஆண்டுகள்!

வாழ்வை தீர்மானிக்கும் 4 ஆண்டுகள்!

வாழ்வை தீர்மானிக்கும் 4 ஆண்டுகள்!


UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM

ADDED : ஜூலை 12, 2024 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2024 12:00 AM ADDED : ஜூலை 12, 2024 10:46 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்பு இன்ஜினியரிங் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளே பிரதானமாக இருந்தன. காலமாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் ஏற்ப அவற்றில் இருந்து ஏராளமான பிரிவுகள் உருவாகி வருகின்றன. அதேபோல், கம்ப்யூட்டர் சயின்ஸ் சமீபகாலங்களாக கொடிகட்டி பறந்துகொண்டிருந்தது என்று சொல்லலாம். தற்போது அதன் வளர்ச்சி ஏ.ஐ., எனும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆக உருவெடுத்துள்ளது.

தொழில் துறை வளர்ச்சியில் 'இண்டஸ்ட்ரி 4.0' முக்கிய அங்கம் வகிக்கும் நிலையில், ஆட்டோமேஷனை நோக்கி உலகம் பயணித்துக்கொண்டிருக்கிறது. ஆட்டோமேஷன் வளர்ச்சியில், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அனைத்து துறைகளிலும் ஏ.ஐ.,யின் பயன்பாடு வேகமாக விரிவடைந்துவருவதால், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா சயின்ஸ், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மிஷின் லேர்னிங் போன்ற படிப்புகள் இன்று அதிகளவில் மாணவர்களால் விரும்பப்படுகிறது. ஏ.ஐ., போன்ற தொழில்நுட்பங்கள் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தக்கூடிய சூழலில் அவற்றை கற்றுக்கொள்வது நல்லது. தொழில்துறையில் மட்டுமின்றி, தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையிலும் ஓர் அங்கமாகி விட்ட நிலையில், அதன் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

வளமான வாய்ப்புகள்


முன்பு ஒரு திசையில் மட்டுமே பலரும் பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், இன்று பல திசைகளில் பல்வேறு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. சுவயம், என்.பி.டி.இ.எல்., யு.டி.எஸ்.ஏ.எச்., உன்னத் பாரத் அபியான், நேரு யுவகேந்த்ரா யூத் கிளப் போன்ற ஏராளமான திட்டங்களை மத்திய அரசு வழங்குகிறது. அவற்றை முறையாக பயன்படுத்திக்கொண்டால், ஒவ்வொருவரும் கல்வியிலும், வாழ்விலும் சிறந்த வாய்ப்புகளை பெற முடியும்.

சிறந்த முறையில் சிந்திக்கவும், செயல்படவும் செய்ய வைப்பதே சரியான கல்வி. இவற்றில் எந்த ஒன்று இல்லை என்றாலும் அது சரியான கல்வி அல்ல. இன்றைய போட்டி நிறைந்த உலகில், தொடர் கற்றல் என்பது மிகவும் அவசியம். திறமை இல்லாதவர்கள் என்று உலகில் யாரும் இல்லை. திறமையை வளர்த்துக்கொள்ளாதவர்கள் தான் இன்று ஏராளமானோர் உள்ளனர். பெரும்பாலான மாணவர்கள், ஒரு கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கு முன்பு என்ன வேலை கிடைக்கும் என்ற கேள்வியையே முன்வைக்கின்றனர். கல்லூரியில் சேர்ந்து, நான்கு ஆண்டுகளில் எவ்வாறு படிக்கிறார்கள், எந்தெந்த திறன்களை வளர்த்துக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களுக்கான வேலை வாய்ப்பும் சரி, அடுத்த 40 ஆண்டுகால வாழ்வும் சரி அமையும் என்பதை முதலில் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி


தங்களது திறமையை வளர்த்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் ஆசிரியர்கள், மாணவர்களின் திறன் வளர்ப்பிலும் பிரதான பங்காற்றுவர். ஆகவேதான், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப தேவையான திறன்களை ஆசிரியர்களிடம் மேம்படுத்தும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு 14 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. மேலும், சிக்கல்களை தீர்க்கும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளின் அடிப்படையில், நம் நாட்டில் கல்வி வளர்ச்சி அடைந்து வருவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

-சாய் பிரகாஷ் லியோமுத்து, சி.இ.ஒ., சாய்ராம் கல்வி நிறுவனங்கள், சென்னை.


sairam@sairam.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us