கவிதையில் அசத்திய மாணவி; வெளிநாடு சுற்றுலா செல்கிறார்
கவிதையில் அசத்திய மாணவி; வெளிநாடு சுற்றுலா செல்கிறார்
UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 09:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத்திருவிழாவில் நடனம், பேச்சு, கவிதை, சிற்பம், நாடகம் முதலான பல்வேறு கவின் கலை போட்டிகள் இடம்பெறுகின்றன.
திருப்பூர் 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படிக்கும் மாணவி அபர்ணாஸ்ரீ, கவிதை எழுதும் போட்டியில், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். மாநில கல்வித்துறை அமைச்சரால் பாராட்டும் பெற்றார்.
இம்மாணவி வெளிநாடு சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டுள்ளார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, முன்னாள் மாணவர்கள் சங்கம், பெற்றோர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.