UPDATED : ஜூலை 13, 2024 12:00 AM
ADDED : ஜூலை 13, 2024 09:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம் :
அரசு கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிட நலத்துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைத்து பெயரினை மாற்றி அமைக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்தார்.
இதை கண்டித்து நேற்று விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதற்கு அனைத்து பார்வர்ட் பிளாக் கட்சிகள், பிரமலை கள்ளர் சமூக நல கூட்டமைப்புகள், கள்ளர் சீரமைப்பு மற்றும் ஆதிதிராவிட நலத்துறை பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஆதரவு தெரிவித்தனர். மேலக்கால், அய்யப்பநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளிகளிலும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.