4,320 மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகிக்க ஏற்பாடுகள் ஜரூர்
4,320 மாணவர்களுக்கு லேப்டாப் விநியோகிக்க ஏற்பாடுகள் ஜரூர்
UPDATED : ஜன 08, 2026 10:29 AM
ADDED : ஜன 08, 2026 10:30 AM
கோவை:
தமிழக அரசின் 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
இத்திட்டத்தின் மூலம் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ ஆகிய கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.
முதற்கட்டமாக, மாவட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அரசு கலைக் கல்லூரி, அரசு ஐ.டி.ஐ, அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட 12 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளை சேர்ந்த 4,320 இறுதியாண்டு மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படவுள்ளன.
டெல், எச்பி, ஏசர் பிராண்டுகளில், ஐ3 ப்ராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி எஸ்.எஸ்.டி, விண்டோஸ் 11 ஹோம், லினக்ஸ், எம்.எஸ். ஆபீஸ் 365 உள்ளிட்ட அம்சங்களுடன் ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பழக 'பெர்பிளெக்ஸிட்டி ப்ரோ ஏ.ஐ சந்தா 6 மாதங்களுக்கு, இலவசமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து துறை சார்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'உயர்கல்வித்துறை மற்றும் எல்காட் நிறுவனம் வழங்கிய கல்லூரிகளின் பட்டியலின் அடிப்படையில் லேப்டாப்கள் விநியோகிக்கப்படுகின்றன.
தற்போது வேளாண் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி ஆகியவை மையங்களாக அமைக்கப்பட்டு, பட்டியலில் உள்ள மாணவர்கள் வரவழைக்கப்பட்டு லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன.
இரண்டாம் கட்டமாக 4,692 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அரசு கல்லூரிகளில் பயிலும் அனைத்து இறுதியாண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்படும்.
சுயநிதி கல்லூரி மாணவர்களின் விவரங்களும் பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு லேப்டாப் வழங்கப்படலாம்' என்றார்.