தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/44 நிகர்நிலைப் பல்கலை: சுப்ரீம் கோர்ட் கேள்வி

44 நிகர்நிலைப் பல்கலை: சுப்ரீம் கோர்ட் கேள்வி

44 நிகர்நிலைப் பல்கலை: சுப்ரீம் கோர்ட் கேள்வி


UPDATED : ஜன 26, 2010 12:00 AM

ADDED : ஜன 26, 2010 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 26, 2010 12:00 AM ADDED : ஜன 26, 2010 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவை தொடர்ந்து பணியாற்றலாம். தற்போதைய நிலை தொடரும்&' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் உருவாக அனுமதி அளித்த முடிவு குறித்த தகவல்களையும், கோர்ட்டில் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.

நாடு முழுவதும் 126 நிகர்நிலைப் பல்கலைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றில், நிகர்நிலைப் பல்கலைக் குரிய தரம் இல்லை என்றும், போதிய பயிற்சியற்ற பேராசிரியர்களை வைத்து, பாடங்கள் போதிப்பதாகவும் புகார்கள் கூறப்பட்டன. மேலும், இந்த பல்கலைகள், விதிமுறைகளை மீறி நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து, விப்லவ் சர்மா என்ற வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

நிகர்நிலைப் பல்கலைகளை ஒழுங்குபடுத்த வலியுறுத்தும்படி அவர் கோரியிருந்தார். நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் குறித்து, பேராசிரியர் பி.என்.டாண்டன் தலைமையில் ஆய்வு நடத்திய குழுவினர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய அரசு சமீபத்தில் மனு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் கூறியதாவது: நிகர்நிலைப் பல்கலைகளில், 44 பல்கலைகளுக்கு நிகர்நிலைப் பல்கலைக்குரிய அந்தஸ்தை பெற தகுதியில்லை. இந்த பல்கலைகளில் விரும்பத்தகாத நிர்வாகம் நடக்கிறது.

தகுதி வாய்ந்த பேராசியர் குழுவுக்கு பதிலாக, குடும்ப உறுப்பினர்களால் பல்கலை நிர்வாகம் கட்டுப்படுத்தப்படுகிறது. மொத்தமுள்ள நிகர்நிலைப் பல்கலைகளில், ஒரு சில பல்கலைகள் மட்டுமே, தங்களின் தரத்தை நிரூபிக்கும் சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளன. எனவே, விதிமுறைகளை மீறி செயல்பட்ட இந்த 44 நிகர்நிலைப் பல்கலைகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம். இவற்றில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

நிகர்நிலைப் பல்கலைக்கு உரிய அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என, பரிந்துரைக்கப்பட்ட 44 பல்கலைகளில், 17 பல்கலைக் கழகங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவை. கடந்த சில நாட்களாக மாணவர்கள் மத்தியில், பெரிய அளவில் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வந்தது. இந்நிலையில், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் தொடர்பான இந்த வழக்கு, நீதிபதிகள் தல்வீர் பண்டாரி மற்றும் பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் இல்லாமல், 44 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என, மத்திய அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு: நிகர்நிலைப் பல்கலை குரிய அந்தஸ்தை பறிக்கலாம் என, பரிந்துரைக்கப்பட்ட 44 பல்கலைக் கழகங்களுக்கு எதிராக தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். இப்போதைய நிலை தொடர வேண்டும். அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்ற, மத்திய அரசின் பரிந்துரை தொடர்பாக, பதிலளிக்கும்படி 44 பல்கலைக் கழகங்களுக்கும், அவற்றின் தாய் பல்கலைக் கழகங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம்.

அங்கீகாரத்தை ரத்து செய்யும் விவகாரம், இரண்டு லட்சத் திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால், சம்பந்தப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் கருத்தைக் கேட்காமல் நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மாட்டோம். மேலும், நிகர்நிலைப் பல்கலை கழகங்கள் குறித்து ஆய்வு நடத்திய கமிட்டியின் அறிக்கையையும், மத்திய அரசு எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரத்தில், இந்த 44 கல்வி நிறுவனங்களுக்கும் நிகர்நிலைப் பல்கலைக் கழக அந்தஸ்து வழங்கலாம் என, மத்திய அரசு பரிந்துரை செய்த பல்கலைக்கழக மானியக் குழுவின் முந்தைய அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us