45 நிமிடம் தொடர் கராத்தே பயிற்சி; மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
45 நிமிடம் தொடர் கராத்தே பயிற்சி; மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி
UPDATED : ஜன 03, 2025 12:00 AM
ADDED : ஜன 03, 2025 09:07 AM
கோவை:
கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியில், 45 நிமிடங்கள் தொடர்ந்து ஈடுபடும் கின்னஸ் சாதனை முயற்சியில், 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தீத்திபாளையத்தில் உள்ள சி.எம்.சி.,சர்வதேச பள்ளியில், 45 நிமிடம் இடைவிடாமல் கராத்தே மற்றும் சிலம்பம் பயிற்சியில் ஈடுபடும், கின்னஸ் உலக சாதனை முயற்சி நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர், 1,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், 6 முதல் 18 வயது வரையும், அதற்கு மேல் வயது உள்ளவர்களுக்கான பயிற்சி தனித்தனியாக நடந்தது. இந்த உலக சாதனை முயற்சியில், கோவைப்புதுார் குருகுல பள்ளி மாணவர்கள், பல்வேறு அகாடமியினர், மார்ஷியல் ஆர்ட்ஸ் குழுவினர், தொடர்ந்து கராத்தே பயிற்சியில் ஈடுபட்டனர்.
மாணவர்களுக்கு மன உறுதி மற்றும் உடல் வலிமையை ஏற்படுத்தும் விதமாக, இதுபோன்று இடைவிடாமல் கராத்தே பயிற்சியில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
கராத்தே மாஸ்டர் சம்பத்குமார், முதன்மை பயிற்சியாளர் சென்சாய் கார்த்திக் உட்பட பலர் ஒருங்கிணைத்து இந்நிகழ்ச்சியை நடத்தினர். பங்கேற்ற அனைவருக்கும், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.