தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ செயல்படாத அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் கிராமப்புற வாசகர்கள் சோகம்

செயல்படாத அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் கிராமப்புற வாசகர்கள் சோகம்

செயல்படாத அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலகங்கள் கிராமப்புற வாசகர்கள் சோகம்


UPDATED : ஜன 03, 2025 12:00 AM

ADDED : ஜன 03, 2025 09:08 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 03, 2025 12:00 AM ADDED : ஜன 03, 2025 09:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னுார்:
14 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு அனைத்து ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் நூலகங்கள் ஏற்படுத்தியது. இதில் 1,000 முதல் 1,500 புத்தகங்கள் வாசிப்புக்கு வைக்கப்பட்டன.

எனினும் நூலகத்தில் பணிபுரிவோருக்கு 1,000 ரூபாய் சம்பளம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. அதுவும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது.

இந்த நிபந்தனையாலும் குறைந்த சம்பளம் என்பதாலும் அன்னுார் வட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகங்கள் செயல்படாமல் மூடி கிடக்கின்றன.

இதுகுறித்து வாசகர்கள் கூறுகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலகம் துவக்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலை தேடுவோர் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஆனால் மிகக் குறைந்த சம்பளம் என்பதால் வேலைக்கு சேர்ந்தவர்கள் பலர் வேலையை விட்டு நின்று விட்டனர்.

மேலும் நூலகத்திற்கு கூடுதல் புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து அன்னுார் ஒன்றியத்தில் பல நூலகங்கள் மூடி கிடக்கின்றன. அரசு விரைவில் கூடுதல் நிதி ஒதுக்கி நூலகர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி, நூலகங்கள் அனைத்து நாட்களும் திறந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us