UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:15 AM
இது குறித்து மத்திய கல்வியியல் துறையின் புள்ளி விவரங்கள் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 140 தனியார் பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 28 பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவில் 15, ம.பி.,யில் 14, கர்நாடகாவில் 10 பல்கலைக்கழகங்கள் துவங்கப்பட்டு உள்ளது.சட்டீஸ்கரில் ஏழு. ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தானில் தலா ஆறு, பீகார், ஒடிசா, உத்தரகண்ட், தெலங்கானாவில் தலா 5, ஆந்திரா, ஹரியானா, மணிப்பூர், தமிழ்நாடு, சிக்கிம், மற்றும் உ.பி.யில் தலா நான்கு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக 2018-19ம் ஆண்டுகளில் மட்டும் 40 தனியார் பல்கலைக்கழகங்களும், 2021-22-ல் 34 பல்கலைக்கழகங்களும் நிறுவப்பட்டுள்ளன.இவ்வாறு மத்திய கல்வித்துறையின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
