தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அங்கீகாரம் புதுப்பிக்காமல் 5 ஆயிரம் தனியார் பள்ளிகள்; டி.டி.சி.பி., ஒப்புதல் எளிமையாக்கப்படுமா?

அங்கீகாரம் புதுப்பிக்காமல் 5 ஆயிரம் தனியார் பள்ளிகள்; டி.டி.சி.பி., ஒப்புதல் எளிமையாக்கப்படுமா?

அங்கீகாரம் புதுப்பிக்காமல் 5 ஆயிரம் தனியார் பள்ளிகள்; டி.டி.சி.பி., ஒப்புதல் எளிமையாக்கப்படுமா?


UPDATED : செப் 30, 2026 11:26 AM

ADDED : செப் 30, 2026 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 11:26 AM ADDED : செப் 30, 2026 11:31 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:
'தமிழகத்தில் அங்கீகாரம் புதுப்பிக்காமல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. புதுப்பிக்க தேவையான டி.டி.சி.பி., அனுமதி பெறும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும்' என பள்ளி நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர்.

மாநில அளவில் மெட்ரிக், நர்சரி, பிரைமரி என 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. பள்ளி அங்கீகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். 2011ல் அங்கீகாரத்தை புதுப்பிக்க புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.

இதன்படி, பள்ளி வளாக கட்டடங்கள், 4 பகுதிகளிலும் குறிப்பிட்ட சதுர அடி இடம் விட்டு அமைய வேண்டும். இதற்கான நகர் மற்றும் ஊரமைப்பு துறை (டி.டி.சி.பி.,) அனுமதி பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் 2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகங்களுக்கு உள்ள சிக்கல் குறித்து அரசிடம் வலியுறுத்திய பின், 2011க்கு முன் கட்டப்பட்ட கிராமப்புற பள்ளிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. நகர்ப்புற பள்ளிகளுக்கு விலக்கு கேட்டு தனியார் பள்ளிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றன.

தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஆறுமுகம் கூறியதாவது:


2016ல் பள்ளி அங்கீகாரத்தை புதுப்பிக்க தேவையான 4 வகை சான்றிதழ்களுடன் டி.டி.சி.பி., அங்கீகாரம் பெற வேண்டும் என்ற புதிய நடைமுறையும் அமலுக்கு வந்தது. இதனால் 2011க்கு முன் கட்டப்பட்ட கிராமப்புற, 2019க்கு முன் கட்டப்பட்ட நகர் பகுதி பள்ளிகளுக்கும் டி.டி.சி.பி., அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது குறித்து அரசிடம் முறையிட்ட நிலையில் புதுப்பித்தலுக்கு அவ்வப்போது தளர்வு கிடைத்தது. 2023க்கு பின் டி.டி.சி.பி., இல்லாத பள்ளிகள் புதுப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது. 2011க்கு முன் கட்டப்பட்ட கிராமப்புற பள்ளிகளுக்கு டி.டி.சி.பி., அனுமதியில் இருந்து நிபந்தனையுடன் விலக்கு அளிக்கப்பட்டது. அது போல் நகர்ப் பகுதி பள்ளிகளுக்கும் விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும், என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us