தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு

மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு

மும்மொழி கொள்கையில் 6ம் வகுப்புக்கு விலக்கு


UPDATED : செப் 30, 2026 11:31 AM

ADDED : செப் 30, 2026 11:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 30, 2026 11:31 AM ADDED : செப் 30, 2026 11:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'சி.பி.எஸ்.இ., பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, 6ம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை கட்டாயம்' என, உத்தரவிடப்பட்டது. மேலும், கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ., 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கட்டாயம் என்பதை எதிர்த்து மாணவர், பெற்றோர் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:


மாணவர்களின் கற்றல் திறன், புதிய மொழியை கற்பித்தலில் உள்ள சவால்கள் மற்றும் கல்வி சுமையை, மத்திய அரசும், சி.பி.எஸ்.இ.,யும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மும்மொழி கொள்கையை உடனடியாக திணிக்க முயற்சிக்காமல், படிப்படியாக அமல்படுத்துவது தான் மாணவர்களுக்கும் உகந்ததாக இருக்கும்.

ஏற்கனவே 7ம் வகுப்புக்கு மும்மொழிக் கொள்கையை உடனடியாக கட்டாயமாக்குவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே அடிப்படையில், 6ம் வகுப்புக்கும் நடப்பு கல்வியாண்டில் விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us