sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/560 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லுாரிகளில் நியமனம்

560 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லுாரிகளில் நியமனம்

560 கவுரவ விரிவுரையாளர்கள் அரசு கல்லுாரிகளில் நியமனம்


UPDATED : செப் 03, 2025 12:00 AM

ADDED : செப் 03, 2025 07:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2025 12:00 AM ADDED : செப் 03, 2025 07:04 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 560 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழகத்தில் அரசு கலை மற் றும் அறிவியல் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில், 15,000 இடங்கள், பல்வேறு பாடப்பிரிவுகளில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதில், நிரந்தர உதவி பேராசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை, மாணவ - மாணவியரின் கல்வி கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க, கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

அதன்படி, கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கடந்த மாதம் 18 முதல் 28 வரை, மண்டல வாரியாக நேர்காணல் நடந்தது. நேர்காணல் வழியே தேர்வு செய்யப்பட்ட, 560 கவுரவ விரிவுரையாளர்களின் விபரங்கள், www.tngasa.org என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு செய்யப்பட்டவர்கள், வரும் 8ம் தேதிக்குள், கல்லுாரிகளில் பணியில் சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us