UPDATED : ஆக 22, 2026 11:10 PM
ADDED : ஆக 22, 2026 11:15 PM
சிதம்பரம்:
அண்ணாமலைப் பல்கலையில் நடந்த வளாக நேர்காணலில் 57 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், பொறியியல் புல பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் சார்பில் பார்மசி துறை மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நடந்தது.
இதில், அப்போலோ, மேக்ஸ், எஸ்.கே.என் ஆர்கானிக்ஸ் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. நேர்காணலுக்கான ஏற்பாடுகளை மருந்தாக்கவியல் துறை வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் கண்ணப்பன் ஒருங்கிணைத்தார்.
நேர்காணலில் பங்கேற்ற 70 மாணவர்களில் 57 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு பொறியியல் புல முதல்வர் சரவணன், இயக்குநர் பிரகதீஸ்வரன், மருந்தாக்கவியல் துறை தலைவர் பார்த்தசாரதி, மின் பொறியியல் துறைத் தலைவர் கணபதி ஆகியோர் பணி நியமன ஆணைகள் வழங்கி பேசினர்.
இணை இயக்குநர் சிவசுப்ரமணி நன்றி கூறினார்.
