59 ஆயிரம் பேருக்கு இன்ஜி. சீட்: ஆக.16 முதல் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்!
59 ஆயிரம் பேருக்கு இன்ஜி. சீட்: ஆக.16 முதல் மூன்றாம் கட்ட கவுன்சிலிங்!
UPDATED : ஆக 15, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மூன்றாம் கட்ட கவுன்சலிங்கில் 21 ஆயிரத்து 901 மாணவர்கள் 11 ஆயிரத்து 950 மாணவிகள் என மொத்தம் 33 ஆயிரத்து 851 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் கட்ட கவுன்சிலிங் முடிவில் மொத்தம் 22531 இடங்கள் காலியாக உள்ளன.
வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த இரண்டாம் கட்ட கவுன்சலிங் முடிவில் 59 ஆயிரத்து 171 மாணவ, மாணவிகளுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 81 ஆயிரத்து 763 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட 59 ஆயிரத்து 492 பேரில் 59 ஆயிரத்து 171 பேருக்கு இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
22 ஆயிரத்து 271 பேர் (27 சதவீதம்) கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளவில்லை. கவுன்சிலிங்கிற்கு வந்தவர்களில் 321 பேர் இடம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.
பிளஸ்2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக மூன்றாம் கட்ட கவுன்சிலிங் முடிந்த பிறகு ஆகஸ்ட் 27ம் தேதி துணை கவுன்சிலிங்கை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.

