உபாசனா திட்டம் மூலம் 60 இல்லத்தரசிகள் பட்டம் பெற்றனர்
உபாசனா திட்டம் மூலம் 60 இல்லத்தரசிகள் பட்டம் பெற்றனர்
UPDATED : மே 17, 2025 12:00 AM
ADDED : மே 17, 2025 09:59 AM
சென்னை:
ஷ்ரத்தா மானு அறக்கட்டளை நடத்திய நான்காவது உபாசனா பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 60 இல்லத்தரசிகள் பட்டம் பெற்றனர்.
உபாசனா என்பது சமூகத்தில் பின்தங்கிய பெண்களை திறமையான கல்வியாளர்களாக உருவாக்கும் ஆறு மாத இலவச பயிற்சி திட்டம். இதில் ஆங்கிலம், தொடக்க கணிதம், அறிவியல், கற்பித்தல் முறைகள், பண்பியல் உள்ளிட்ட பாடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறக்கட்டளை நிறுவனர் மதுமதி நாராயணன் கூறுகையில், இதுவரை 510 பெண்கள் பயிற்சி பெற்றுள்ளனர்; தற்போது 5,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இவர்களால் பயன் பெறுகின்றனர், என்றார்.
விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சிறப்பு விருந்தினராக பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
விழாவில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பேசுகையில், கல்வி வாயிலாக பெண்கள் பெற்ற அதிகாரம் என்பது, அவர்களது குடும்பத்தையும் சமூகத்தையும் மாற்றும் சக்தி வாய்ந்தது. உபாசனா திட்டம் போன்ற முயற்சிகள் பெண்களின் தன்னம்பிக்கையையும், சமூக மேலாதிக்கத்தையும் வளர்க்கின்றனர். கல்வி வாயிலாக பெண்கள் முன்னேறும் பாதை, ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாகும் என்றார்.
ஐஎம்எப் தரவின்படி, வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பெண் சமூகத்திற்குக் கொடுத்தால் நாட்டு உள்நாட்டு உற்பத்தி 27% உயர வாய்ப்பு உள்ளதாகவும், இதை நோக்கமாகக் கொண்டு உபாசனா செயல்படுவதாகவும் அறக்கட்டளை தெரிவித்தது.