UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:14 AM
ஊட்டி:
நீலகிரியில், 6,320 மாணவ, மாணவியர் பிளஸ்--2 பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.
மாநிலத்தில், 2024- 25-ம் கல்வியாண்டிற்கான, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்குகிறது. இதையொட்டி, பிளஸ்-2 செய்முறை தேர்வு, பிப்.,7ம் தேதி துவங்கி, 14ம் தேதி வரையும்; பிளஸ்--1 செய்முறை தேர்வு, பிப்., 15ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரையும்; 10ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்., 22ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரையும் நடந்தது.
பிளஸ்---2 வகுப்புக்கான பொதுத்தேர்வு, 3-தேதி இன்று துவங்கி, 25ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ்--1 வகுப்புக்கான பொதுத்தேர்வு, 5ம் தேதி துவங்கி, 27ம் தேதி வரை நடக்கிறது. 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு, 28ம் தேதி துவங்கி, ஏப்., 15ம் தேதி வரை நடக்கிறது. 'பிளஸ்--2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம், 9ம் தேதி வெளியாகும்; பிளஸ்--1 மற்றும் 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியாகும்,' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் விபரம்
இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள, 'ஊட்டி, குன்னுார் மற்றும் கூடலுார் கல்வி மாவட்டங்களில் உள்ள, 41 மையங்களில் 2,925 மாணவர்கள் , 3,395 மாணவிகள்,' என, மொத்தம், 6,320 பேர், பிளஸ்- 2 தேர்வு எழுதுகின்றனர்.
பிளஸ்-1 தேர்வை, 3,079 மாணவர்கள், 3,489 மாணவிகள் என மொத்தம், 6,568 பேர் எழுதுகின்றனர். பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வு பணியில், 42 முதன்மை கண்காணிப்பாளர்கள்; 41 துறை அலுவலர்கள்; 82 அலுவலக பணியாளர்கள்; 618 அறை கண்காணிப்பாளர்கள்; வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள், 15 பேர் என, மொத்தம் 798 ஆசிரியர்கள் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.
மேல்நிலை தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்கும் பொருட்டு பறக்கும் படையினர், 81 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
10 வகுப்பு தேர்வை, 58 மையங்களில் 3,340 மாணவர்கள், 3,519 மாணவிகள் என, மொத்தம் 6,859 மாணவ, மாணவிகள் எழுது கின்றனர். இத்தேர்வு பணியில், 58 முதன்மை கண்காணிப்பாளர்கள், 58 துறை அலுவலர்கள்; 116 அலுவலக பணியாளர்கள்; 662 அறை கண்காணிப்பாளர்கள்; வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலர்கள் 23 பேர் என, மொத்தம், 917 ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதற்கு, 108 பேர் அடங்கிய பறக்கும் படை உள்ளது. மாவட்டத்தில், 4 மையங்களில் தனித்தேர்வர்கள் பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10 வகுப்பு தேர்வுகளை எழுதுகின்றனர்.
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, தேர்வு மைய வளாகங்களில் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.