எதிர்காலத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்தான் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேச்சு
எதிர்காலத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம்தான் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி பேச்சு
UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:15 AM

திருப்பரங்குன்றம் :
எதிர்காலத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் தான் முக்கியத்துவம் பெறும் என இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பேசினார்.
மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் சுப்பையாநாயுடு - கோமதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் கல்லுாரி நிறுவனர் தின விழா, சுப்பையாநாயுடு பிறந்தநாள் விழா, பரிசளிப்பு விழா ஆகிய விழாக்கள் நடந்தன.
கல்லுாரித் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி சிவசுப்பிரமணியன் பேசியதாவது:
மாணவர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பிடித்துக் கொள்ள வேண்டும். விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட் இலக்கை அடைந்தால் அது மிகப்பெரிய வெற்றி. அப்போதுதான் விஞ்ஞானிகளுக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கும். அதைப்போல மாணவர்கள் இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி காண முயல வேண்டும். படிக்கும் காலங்களில் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
செயலாளர் விஜயராகவன், உதவித் தலைவர் ஜெயராம், உதவிச் செயலாளர் ராஜேந்திரபாபு, பொருளாளர் ஆழ்வார்சாமி, முதல்வர் ராமசுப்பையா பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை உறுப்பினர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினர். டீன் அழகேசன் ஒருங்கிணைத்தார்.