கணினி அறிவியல் பாடத்தில் 6,996 பேர் சதம்: முழு விபரம் இதோ!
கணினி அறிவியல் பாடத்தில் 6,996 பேர் சதம்: முழு விபரம் இதோ!
UPDATED : மே 06, 2024 12:00 AM
ADDED : மே 06, 2024 12:24 PM

சென்னை:
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 97.45 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளனர்.
சிவகங்கை, ஈரோடு மாவட்டங்களில் 97.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தையும், அரியலூர் மாவட்டம் 97.25 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. குறைந்தபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 90.47 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் விபரம் பின்வருமாறு:
நூற்றுக்கு நூறு பெற்றவர்கள்
கணினி அறிவியல்- 6,996 பேர்,
தமிழ்- 35 பேர்,
ஆங்கிலம்- 7 பேர்,
இயற்பியல்- 633 பேர்
வேதியியல்- 471 பேர்
உயிரியல்- 652 பேர்,
கணிதம்- 2,587 பேர்,
தாவரவியல்- 90 பேர்,
விலங்கியல்- 382 பேர்,
வணிகவியல்- 6,142 பேர்,
கணக்குப் பதிவியல்- 1,647 பேர்,
பொருளியல்- 3,299 பேர்,
கணினி பயன்பாடுகள்- 2,251 பேர்,
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் - தலா 210 பேர்,
26,352 பேர் ஏதேனும் ஒரு பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மொத்தம் 5,603 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில் அதில் 5,161 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
125 சிறைவாசிகள் தேர்வு எழுதிய நிலையில், அதில் 115 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாடப் பிரிவுகள் வாரியான தேர்ச்சி சதவீதம்
அறிவியல் பாடப் பிரிவுகள்- 96.35 %
வணிகவியல் பாடப் பிரிவுகள்- 92.46 %
கலைப்பிரிவுகள்- 85.67 %
தொழிற்பாடப் பிரிவுகள்- 85.85%
பிளஸ் 2 தேர்வில் 94.56% தேர்ச்சி
அரசுப்பள்ளி - 91.02%
அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.49 %
தனியார் பள்ளிகள்- 96.07 %
இருபாலர் பள்ளிகள் - 94.07 %
பெண்கள் பள்ளிகள் - 96.39 %
மே 9ல் தற்காலிக சான்றிதழ்
இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 9ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு
2019- 91.30%
2020- 92.34%
2021- 100%
2022- 93.76%
2023- 94.03%
2024- 94.56%