தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

கலை, அறிவியல் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 06, 2024 12:00 AM

ADDED : மே 06, 2024 11:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2024 12:00 AM ADDED : மே 06, 2024 11:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கு, இன்று முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், வரும் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்பு, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்ப விபரங்களை பதிவு செய்யலாம். அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர், பதிவு கட்டணம் மட்டும், 2 ரூபாய் செலுத்த வேண்டும். மற்றவர்கள் பதிவு கட்டணம், 2 ரூபாயுடன், விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாய் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்தலாம். ஆன்லைன் வழியில் செலுத்த முடியாதவர்கள், கல்லுாரிகளின் சேர்க்கை உதவி மையங்களுக்கு வங்கி வரைவோலை எடுத்து சென்று செலுத்தலாம்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணை விபரங்களை, மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு, 044 - 2432 3106, 2434 2911 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us