UPDATED : ஜூலை 19, 2023 12:00 AM
ADDED : ஜூலை 19, 2023 09:11 AM
அ நிறம் | அளவு
கோவை:
வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்வில் பங்கேற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று நடக்கிறது.வேளாண் பல்கலையின் கீழ், 18 உறுப்பு கல்லுாரிகள், 28 இணைப்பு கல்லுாரிகளில், மொத்தம் 5,361 இடங்கள் கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படவுள்ளன. இதில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர, விண்ணப்பித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, கடந்த 12ம் தேதி இணையதள பொதுப்பிரிவு கலந்தாய்வு நடந்தது. இக்கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, இன்று மதியம் (ஜூலை 19ம் தேதி) சான்றிதழ் சரிபார்ப்பு, பல்கலை வளாகத்தில் உள்ள அண்ணா அரங்கில் நடக்கிறது. அசல் கல்வி சான்றிதழ்களுடன் மாணவர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
