UPDATED : ஜூன் 29, 2021 12:00 AM
ADDED : ஜூன் 29, 2021 01:23 PM
அ நிறம் | அளவு
கோவில்பாளையம்:
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், துவக்க, நடுநிலை பள்ளிகளில், நேற்று ஒரே நாளில், 781 பேர் புதிதாக சேர்ந்தனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இரு பேரூராட்சி, ஏழு ஊராட்சி மற்றும் மாநகராட்சி பகுதியில், 53 துவக்கப் பள்ளிகளும், 20 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இப்பள்ளிகளில் நேற்று மாணவர் சேர்க்கை துவங்கியது. இதில் முதல் வகுப்பில், 481 பேரும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை, 300 பேரும் என, 781 பேர் புதிதாக சேர்ந்தனர். பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர்கள், மாணவர் சேர்க்கை, புத்தகங்கள் வழங்கும் பணி குறித்தும் ஆய்வு செய்தனர்.
