UPDATED : ஜூலை 10, 2026 04:30 PM
ADDED : ஜூலை 10, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
கோவை:
வேளாண் பல்கலை வளாகத்தில் மத்திய அரசின் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா செயல்படுகிறது. இதில் புதிய வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம், வேளாண் துளிர் நிறுவனத்துக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுத்த புதிய தொழில் முனைவோர் மற்றும் உரிமையாளர்களுக்கு ரூ.45.40 லட்சம், துளிர் நிறுவனங்கள் மற்றும் மானியதாரர்களுக்கு ரூ.30 லட்சம், புதிய வேளாண் தொழில் முனைவோர் மற்றும் 10 மானியதாரர்களுக்கு ரூ.7.80 லட்சம் என ரூ.83.20 லட்சத்தை துணைவேந்தர் சுப்பிரமணியன் வழங்கினார்.
