இங்கேயே கை நிறைய சம்பாதிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
இங்கேயே கை நிறைய சம்பாதிக்க இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
UPDATED : ஜூலை 10, 2026 04:27 PM
ADDED : ஜூலை 10, 2026 04:30 PM
கோவை:
“கோவையில் படித்து பட்டம் பெறும் மாணவர்கள் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போய் வேலை செய்கிறார்கள். அவர்கள் இங்கேயே வேலை பார்த்து கோவையின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், புதிய அரசு புதுமையான திட்டங்கலை செயல்படுத்த வேண்டும்” என கொங்கு குளோபல் போரம் வலியுறுத்தி உள்ளது.
இயக்குநர் சதீஷ் கூறியதாவது:
”கொங்கு மண்டல தொழில் முனைவோருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், அதிக ஊதியம் தரக்கூடிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள்.
ஆனால், கோவையின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மிகவும் மந்தமாக நடக்கின்றன. இதனால் புதிய முதலீடுகள் எல்லாம் ஓசூர், தூத்துக்குடிக்கு செல்கிறது” என தொழில் அமைச்சர் கீர்த்தனாவிடம் போரம் இயக்குனர் சதீஷ் கோரிக்கை வைத்தார்.
'கைடன்ஸ் தமிழ்நாடு' மூலம் கோவைக்கு புதிய முதலீடுகள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததாக சதீஷ் கூறினார்.
