பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க 83,000 புத்தகப் பைகள் அனுப்பி வைப்பு
பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்க 83,000 புத்தகப் பைகள் அனுப்பி வைப்பு
UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 10:11 AM

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்க, 83,000 புத்தகப் பைகள் அனுப்பிவைக்கப்படுகிறது.
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறந்ததும் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடை, சைக்கிள், காலணி, புத்தகப்பை போன்றவை தமிழகரசின் பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்படும்.
அந்த வகையில், மாணவர்களுக்கு தரமான புத்தகப் பைகளை வழங்கும் வகையில் தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர்கள் படங்கள் ஏதுமின்றி புதிய புத்தகப் பைகள் ஹரியானாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையில் பச்சை நிறத்திலும், 4 ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரையில் நீலநிறத்திலும், 8ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கருப்பு நிறத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும், 179 அரசு துவக்கப்பள்ளி, அரசு உயர்நிலை, மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்கட்டமாக, 83,000 பைகள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த பைகளை
அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வாகனம் மூலம் கொண்டு சென்றனர்.