UPDATED : அக் 18, 2024 12:00 AM
ADDED : அக் 18, 2024 10:12 AM

உடுமலை :
பள்ளிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தற்போது, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வட்டாரங்களில் பருவ நிலை மாற்றமடைந்துள்ளது.
இதனால், பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு, கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில், இடியும் நிலையில் உள்ள சிதிலமடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பது, பாதுகாப்பில்லாத மின் இணைப்புகளை மாற்ற வேண்டும்.
அருகில் புதர்ச்செடிகள் அல்லது நீர்நிலைகள் இருக்கும் பகுதிகளிலிருந்து விஷப்பூச்சிகள் வராமல் இருப்பதை உறுதி செய்வது, மாணவர்கள் பாடம் படிப்பதற்கு அமர்ந்துள்ள வகுப்பறைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
மழைநீர் உள் புகாத வகையில் பள்ளி வளாகத்தை பராமரிப்பது, விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவது, சமையலறை கூடத்தில் மழைநீர் செல்லாதவகையில் பொருட்களை பத்திரப்படுத்த வேண்டும்.
சளி, காய்ச்சலுடன் வரும் மாணவர்கள் உடனடியாக சிகிச்சை பெறுவதற்கு பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும், சுற்றுப்புற துாய்மையை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, கல்வித்துறை தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.