தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வான 90 மாணவிகள்

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வான 90 மாணவிகள்

மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்வான 90 மாணவிகள்


UPDATED : ஜன 22, 2026 10:52 AM

ADDED : ஜன 22, 2026 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 22, 2026 10:52 AM ADDED : ஜன 22, 2026 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
மாநில அளவிலான போட்டிக்கு பங்கேற்க சென்ற மாணவிகளுக்கு சி.இ.ஓ., மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பள்ளி கல்வி துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 14, 17, 19 வயது பிரிவுகளின் கீழ் மாவட்ட அளவிலான நீச்சல் போட்டி, கடற்கரை கையுந்து பந்து, வாள் சண்டை, டேக்வாண்டோ, ஸ்குவாஷ் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

தொடர்ந்து மாநில அளவிலான நீச்சல் போட்டி திருநெல்வேலி மாவட்டத்திலும், வாள் சண்டை போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கடற்கரை கையுந்து பந்து போட்டி நாகப்பட்டினம் மாவட்டத்திலும், டேக்வாண்டோ, ஸ்குவாஷ் மதுரை மாவட்டத்திலும் நடக்கிறது .

பள்ளி மாணவிகளுக்கான போட்டிகள், இன்று 22 மற்றும் நாளை 23ம் தேதி நடக்கிறது. மாணவர்களுக்கான போட்டிகள் நாளை மறுநாள் 24 மற்றும் 25ம் தேதி நடக்கிறது. மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்ற 90 மாணவிகள் நேற்று புறப்பட்டனர்.

மாணவிகளை சி.இ.ஓ., கார்த்திகா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கீதா மற்றும் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us