தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/9,429 பணியாளர் பதவி உயர்வு

9,429 பணியாளர் பதவி உயர்வு

9,429 பணியாளர் பதவி உயர்வு


UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM

ADDED : ஜூலை 22, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2023 12:00 AM ADDED : ஜூலை 22, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகளில் 9,429 பேருக்கு பழைய விதிப்படி பதவி உயர்வு வழங்க நகராட்சி நிர்வாக இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார்.தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கான புதிய விதிகள் சமீபத்தில் அறிவிக்கப் பட்டன. இதன்படி, பணியாளர்கள் பதவி உயர்வு பெற, பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்; பணி அனுபவமும் அவசியம். ஆனால் பெரும்பாலானோர், 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமா முடித்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.எனவே, புதிய விதி அமல்படுத்தப்பட்டால், தகுதி பெற்றுள்ள பலருக்கு பதவி உயர்வு கிடைக்காது. இதனால், புதிய விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த பணியாளர்கள், பழைய விதிமுறைகளின்படி பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர்.இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயனுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு எழுதியுள்ள கடிதம்:
சென்னை மாநகராட்சியை தவிர்த்து மற்ற, 20 மாநகராட்சிகளில், 3,417 பேர்; 138 நகராட்சிகளில், 6,012 பேர் என, மொத்தம் 9,429 பேர், மாநகராட்சி பணி விதிகள் - 1996ன்படி பதவி உயர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். புதிய விதிகளால் இவர்கள் பதவி உயர்வு பெற முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டிற்கான பதவி உயர்வுக்கு மட்டும், ஏற்கனவே உள்ள விதிகளைப் பின்பற்ற வேண்டும். இதற்காக, புதிய விதிகளில் பதவி உயர்வு அளிப்பதில் இருந்து, ஆறு மாதம் காலம் விலக்கு அளித்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆறு மாதம் அவகாசம் வழங்குவது குறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் பேரூராட்சிகளின் கமிஷனர் பதில் அளிக்க, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் கார்த்திகேயன் கடிதம் எழுதி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us