தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/95 சதவீத பரிந்துரைகளுக்கு ஜி- 20 அமைச்சர்கள் ஆதரவு

95 சதவீத பரிந்துரைகளுக்கு ஜி- 20 அமைச்சர்கள் ஆதரவு

95 சதவீத பரிந்துரைகளுக்கு ஜி- 20 அமைச்சர்கள் ஆதரவு


UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM

ADDED : ஜூலை 29, 2023 08:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2023 12:00 AM ADDED : ஜூலை 29, 2023 08:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜி - 20 மாநாட்டில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக் குழு கூட்டம் முடிந்து, இறுதி பரிந்துரைகளுக்கான அமைச்சர்கள் கூட்டம், மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில், சென்னையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தை, பிரதமர் மோடி, காணொலி வாயிலாக துவங்கி வைத்தார்.அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான கூட்டத்தில், நிலத்தின் வளத்தை மீட்டெடுத்தல், சுழற்சி பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துதல், கடல் சார் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகிய, மூன்று குறிக்கோள்களை அடிப்படையாக வைத்து, ஆலோசனைகள் நடந்தன. இந்த குறிக்கோள்களின் கீழ், 10 செயல் திட்ட அறிக்கைகள் உருவாக்கப்பட்டன. நிலையான மற்றும் மீள்திறன் கடல் சார் பொருளாதாரத்திற்கான சென்னை உயர்மட்ட கோட்பாடுகள் என்ற திட்ட அறிக்கைக்கு, ஜி - 20 நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.இந்த திட்ட அறிக்கையில், 68 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அதில், 64 பரிந்துரைகளை ஜி - 20 பிரதிநிதிகள் முழுமனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். வளரும் நாடுகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு, வளர்ந்த நாடுகள், 8.20 லட்சம் கோடி ரூபாய் காலநிலை தாக்க நிதி வழங்குவது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில், ஜி - 20 நாடுகளைச் சேர்ந்த, 34 அமைச்சர்கள் உட்பட, 225 பிரதிநிதிகள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us