குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன துறைக்கு ஒரு பெரும் ஊக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்
குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன துறைக்கு ஒரு பெரும் ஊக்கம்: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : அக் 07, 2026 10:43 AM
ADDED : அக் 07, 2026 10:45 AM

புதுடில்லி:
10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பது, குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவன துறைக்கு ஒரு பெரும் ஊக்கம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ரூ.500 கோடிக்கு மேற்பட்ட போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களை நேரடியாக கண்காணிக்க 'ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைகள் ஆணையம்' அமைக்கவும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் நேரடி பங்கு முதலீட்டுக்காக வளர்ச்சி நிதியை ஏற்படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டு உள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பது, குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவன துறைக்கு ஒரு பெரும் ஊக்கம். அமைச்சரவையின் இந்த முடிவு, அடுத்த தலைமுறை இந்திய தொழில் நிறுவன தலைவர்களை உருவாக்குவதை நோக்கிய ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், உலகளாவிய சந்தைகளில் நுழையவும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும். ஒருங்கிணைந்த போக்குவரத்து மற்றும் சரக்கு சேவைகள் ஆணையம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது, நமது வளர்ச்சிப் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
